பத்து பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது
ஜீவஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக இன்றைய நாளில் (04.10.2019) மட்டக்களப்பு மண்டூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த பத்து மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.
குறிப்பிட்ட மாணவர்கள் 6km தூரத்தில் இருந்து காட்டு பாதையூடாக நடந்து வருபவர்கள். கூடவே யானைகள் மற்றும் ஏனைய ஆபத்தான விலங்கினங்கள் கொண்ட ஓர் பாதையாகும்.
இவற்றை அறிந்து கொண்ட ஜீவ ஊற்று அன்பின் கரம் குழுவினர் வேகமாக செயற்பட்டு இந்த உதவிகள் கிடைக்க வழியமைத்தனர்.
இந்த உதவி ஜீவ ஊற்று அன்பின் கரம் நியூசிலாந்து இணைப்பாளர் அவர்களால் வழங்கப்பட்டது. அத்துடன் எமது நிர்வாகத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சகோதரன் திலீப் மற்றும் அவருடன் இணைந்து சாயி ஆகியோர் இவற்றை உரியவர்களிடம் கொண்டு சேர்த்தார்கள்
தேவன் தாமே ஒவ்வொருவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!!