கிளிநொச்சி உதயநகர் பகுதியிலும் நிவாரணம் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக இன்றைய நாளில் (05.09.2019) கிளிநொச்சி மாவட்டத்தில் உதயநகர் பகுதியில் வசிக்கும் பத்து வறுமை கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
கனடா தேசத்தில் வசிக்கும் சகோதரி ஷகிலாவின் பிறந்த தினத்தை முன்னிட்டே இந்த குறிப்பிட்ட உதவி வழங்கப்பட்டது.
இந்த குறிப்பிட்ட உதவியை வழங்கிய குடும்பத்தினரையும் இவற்றை ஒழுங்கமைப்பு செய்த சகோதரர்களையும் தேவன் தாமே நிறைவாக ஆசீர்வதிப்பாராக.
நீங்களும் உங்கள் பிறந்த தினம் மற்றும் ஏனைய மகிழ்ச்சியான தருணங்களை எமது தாயக சகோதரர்களுடன் இணைந்து கொண்டாட விரும்பினால் தயவு செய்து எம்முடன் தொடர்பு கொள்ளவும்.