திருகோணமலையிலும் ஐம்பது குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக கடந்த 06.08.2019 திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பாட்டாளிபுரம், நல்லூர் ஆகிய கிராமங்களில் 50 வறுமை கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
இது மூன்றாவது கட்டமாகவே வழங்கப்பட்டிருந்தது. எமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்ட பகுதியை சுட்டி காட்டி உதவி கோரியிருந்தோம். அதனை அறிந்த ஓர் சில ஆர்வலர்கள் எம்முடன் தொடர்புகளை ஏற்படுத்தி உதவிகளை செய்து வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.
இவ் உதவியானது ஜீவ ஊற்று அன்பின் கரம் நியூசிலாந்து கிளையின் பொறுப்பாளரினால் வழங்கப்பட்டிருந்தது.
ஒழுங்குகளை சரியான முறையில் ஏற்படுத்திய அத்தனை பேருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
தேவன்தாமே உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக !!!