திருகோணமலை மாவட்டத்தில் பத்து குடும்பங்களுக்கு நிவாரண பணி மேற்கொள்ளப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக இன்றைய நாளில் (21.07.2019) திருகோணமலை மாவட்டத்தில் வீரம்மாநகர், நீலாக்கேணிபகுதியை சேர்ந்த 10 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
இந்த உதவியை லண்டன் தேசத்தில் வசிக்கும் சகோதரன் பாஸ்கரன் குடும்பத்தினர் தமது மகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு வழங்கி கொண்டாடினர்.
இதற்கு முன்னரும் 30 குடும்பங்களுக்கு இதே குடும்பத்தினரால் நிவாரண உதவி குறிப்பிட்ட இடத்தில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே எமது முகநூலின் மூலமாய் குறிப்பிட்ட பகுதியை சுட்டி காட்டி அதற்கு தேவைப்படும் உதவியை விபரித்திருந்ததுடன் உதவியையும் கோரியிருந்தோம்.
அவற்றை அடையாளம் கண்ட குறிப்பிட்ட புலம்பெயர் வாழ் சகோதரன் தமது பிறந்த தினத்தையே இவ்வாறு மிக சிறப்பாக கொண்டாடினார்.
ஏனைய உதவிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட உங்களது ஜெபம் மற்றும் உதவிக் கரத்தை நீட்டுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!!!