திருகோணமலை பாட்டாளிபுர பகுதியில் 30 குடும்பங்களுக்கு நிவாரண பணி மேற்கொள்ளப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக இன்றைய நாளில் (18.07.2019) திருகோணமலை மாவட்டத்தில் பாட்டாளி புரம் பகுதியை சேர்ந்த 30 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
இந்த உதவியை லண்டன் தேசத்தில் வசிக்கும் சகோதரன் பாஸ்கரன் குடும்பத்தினர் தமது மகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு வழங்கி கொண்டாடினர்.
ஏற்கனவே எமது முகநூலின் மூலமாய் குறிப்பிட்ட பகுதியை சுட்டி காட்டி அதற்கு தேவைப்படும் உதவியை விபரித்திருந்ததுடன் உதவியையும் கோரியிருந்தோம்.
அவற்றை அடையாளம் கண்ட குறிப்பிட்ட புலம்பெயர் வாழ் சகோதரன் தமது பிறந்த தினத்தையே இவ்வாறு மிக சிறப்பாக கொண்டாடினார்.
ஏனைய உதவிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட உங்களது ஜெபம் மற்றும் உதவிக் கரத்தை நீட்டுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!!!