நோர்வே குழந்தை பிரதிஷ்டையை முன்னிட்டு வவுனியாவிலும் பால்மா வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக, இன்றைய தினம் ( 02.06.2019) நோர்வேயில் வசிக்கும் சகோதரர் தீபன் ரூபா தம்பதியினர் தமது பிள்ளைகளான இசான், அபிசன் ஆகியோரை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதை முன்னிட்டு வவுனியா மாவட்டத்திலும் சுமார் 20 சிறு பிள்ளைகளுக்கு பால்மா வழங்கப்பட்டது.
ஏற்கனவே யாழ்ப்பாணத்திலும் இவ் உதவி வழங்கப்பட்டிருந்தது. அநேகர் ஆசீர்வதிக்கப்பட்டருந்தனர்.
ஜீவ ஊற்று அன்பின் கரம் சார்பாக இசான், அபிசன் பிள்ளைகளை நாமும் ஆசீர்வதிக்கின்றோம். உதவி பெற்ற பிள்ளைகளையும் தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக!!!
இது போன்ற நிகழ்வுகளை நீங்கள் கொண்டாடும் அதே வேளை எம் இலங்கை உறவுகளையும் நினைவு கூர்ந்து செயற்பட உங்களையும் அன்புடன் ஜீவ ஊற்று அன்பின் கரம் அழைக்கின்றது.